என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விமானப்படை தாக்குதல்
நீங்கள் தேடியது "விமானப்படை தாக்குதல்"
சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். #USledairstrikes #Syriaairstrikes
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டேய்ர் அல்-சோர் மாகாணத்துக்கு உட்பட்ட பக்ஹவுஸ் நகரில் உள்ள சில பண்ணை நிலங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற மார்ச் பத்தாம் தேதிவரை அரசு இறுதிக்கெடு விதித்திருந்தது. ஆனால், அவர்கள் சரணடைய மறுத்து விட்டனர்.
அந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பக்ஹவுஸ் நகரின் மீது அமெரிக்காவை சேர்ந்த போர் விமானங்கள் தலமையில் இன்று வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 50 பேர் உயிரிழந்ததாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #USledairstrikes #Syriaairstrikes
பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்தியா-பாகிஸ்தானில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #Surgicalstrike2 #Indiaclosesairports #Pakistanclosesairports
புதுடெல்லி:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரைப்படை மற்றும் விமானப்படை வீரர்கள் எதையும் சமாளிக்கும் துணிச்சலுடன் தயார்நிலையில் உள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவின் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதனால் இருநாடுகளும் எல்லைப்பகுதியில் மீண்டும் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் விமான நிலையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன.
இமாச்சல பிரதேசத்தின் சிம்லா, பூந்தார், காகல் விமான நிலையங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், டெல்லிக்கு வடக்கே வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விமானப்படை வசதிக்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பாகிஸ்தானின் உள்ள இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், பைசலாபாத், சிலால்கோர் ஆகிய விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இவ்விரு நாடுகளின் உள்நாட்டு விமானச் சேவைகள் மட்டுமின்றி, பிறநாடுகளில் இருந்து மேற்கண்ட விமான நிலையங்களில் இறங்கி வேறு விமானங்கள் மூலம் மற்ற இடங்களுக்கு செல்லும் ‘டிரான்சிஸ்ட்’ சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பல வெளிநாட்டு விமானங்கள் இங்கு தரையிறங்க அனுமதி அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே மிக வீரியமான விமானப்படை தாக்குதலும், அதற்கு எதிர்தாக்குதலும் விரைவில் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. #Surgicalstrike2 #Indiaclosesairports #Pakistanclosesairports

×

X